Oct 16, 2026
Thisaigal NewsYouTube

110 பேர் கைது செய்யப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
110 பேர் கைது செய்யப்பட்டனர்

டிச. 8-

கோலாலம்பூரில் Bukit Bintang உள்ள Jalan Changkat பகுதியில் 9 பொழுதுபோக்கு தலங்களிலும் 7 தங்கும் விடுதிகளிலும் நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில், 110 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டுவாசிகள் ஆவர்.

இது குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Rusdi Mohd Isa கூறுகையில், 23 முதல் 57 வயதுடைய அனைவரும் அதிகாலை 2 மணி தொடங்கிய நான்கு மணி நேரம் நீடித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் குடிநுழைவுத் துறை, Kuala Lumpur மாநகராட்சி மன்றம், கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய துறைபாகியத் துறைகளின் 254 அதிகாரிகள் ஈடுபட்டனர். இது பொழுதுபோக்கு மையங்களில் நடக்கும் பாலியல் தொழிலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது எனவும் Datuk Rusdi குறிப்பிட்டார.

அவர் கூறுகையில், இந்த நடவடிக்கையில், 23 ஆண்கள், 12 பெண்கள் உட்பட 41 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 373Bயின் படியும் 1992 கூட்டரசுப் பிரதேச Kuala Lumpur இன் பொழுதுபோக்குச் சட்டம் பிரிவு 4 இன் படியும் பாலியல் தொழில் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலை அனுமதி விதிமுறைகளை மீறுதல், போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்துதல், காலாவதியான பயண ஆவணங்கள் கொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 36 பேரை மலேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →