பொந்தியான், ஜூலை.25-
கோலாலம்பூரில் நாளை நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் உறுப்பினர்கள் பங்கேற்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்புக் கட்சி என்ற முறையில் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் வீற்றிருக்கின்றன. எனவே அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், எதிக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்படுகின்றனர் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.








