பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.23-
அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 3 வயது சிறுவன் ஒருவன், ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றான். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கோத்தா டாமன்சாராவில் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாலை 4.42 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.
அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் கீழ் தளத்தில் சிறு கால்வாயில் அந்தச் சிறுவனின் உடல் கிடந்தது குறித்து பொதுமக்களிடமிருந்து தாங்கள் அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








