பகடி வதை சம்பவங்களைக் கையாள ஒரு மாணவர் விடுதிக்கு 3 பேர் என கடந்த 2022 ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 36 விழுக்காடு வார்டன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாக வழிகாட்டுதல் எனப்படும் மைஎஸ்ஜி இல் காட்டப்பட்டுள்ளது போல், வார்டன்களின் கடமைகளுக்கு ஏற்ப வார்டன்கள், தலைமை வார்டன்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அவ்வப்போது நடத்துகிறது என்று ஃபட்லினா கூறினார்
மாணவர்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு ஆகிய விவகாரத்தில் கல்வி அமைச்சு அதிக கவன,ம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மாணவரும் அக்குற்றத்தைப் புரிந்தவரும் கவுன்செலிங்கிற்கு அனுப்பப்படுவர் என்றார். மேலும், கல்வி அமைச்சின் வசமும் இதற்கான குழுவைக் கொண்டுள்ளதாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.








