Aug 11, 2026
Thisaigal NewsYouTube
காஷ்மீர் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

காஷ்மீர் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.23-

இந்தியா, காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹால்கமில் நேற்று பிற்பகலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த முன்னணி சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தற்குக் கிடைத்த தகவலின்படி, மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர், பஹால்கம் சுற்றுலாத் தலத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த போது துப்பாக்கிகளை ஏந்திய பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுற்றுப் பயணிகளை நோக்கி பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளைச் சவாரிக்குக் கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் பயங்கரவாதிகளை ஒடுக்க உடனடியாக இராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

Related News

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது