ஜொகூர், ஜூலை 05-
ஜொகூர், ஜொகூர் பாரு-வில் 200 ஆயிரம் வெள்ளி கடனுவியைப் பெற விரும்பி, ஏமாற்றுப்பேர்வழியிடம், தமது சேமிப்பு பணமான 146 ஆயிரம் வெள்ளி 20 காசை இழந்துள்ளார், சிகை அலங்கார கடை உரிமையாளர் ஒருவர்.
சமூக ஊடகத்தில் கண்டிருந்த கடனுதவி நிறுவனம் குறித்த விளம்பரத்தை நம்பிய, அந்த 28 வயதுடைய பெண், அதில் வழங்கப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார்.
பின்னர், அப்பெண்ணின் சுயவிவரம், பொருளக கணக்கு விவரம், கடனுதவியைப் பரிசீலிப்பதற்கான பணம் முதலானவற்றைக் கோரிய அந்த ஏமாற்றுப்பேர்வழி, அவரிடம் பல உள்நாட்டு வங்கிகளின் கணக்கு விபரங்களை வழங்கியுள்ளார்.
அப்பெண்ணும் 16 முறை, அந்த கணக்குகளில் பணத்தை செலுத்திய நிலையில், அந்த ஏமாற்றுப்பேர்வழி மேலும் பணத்தை கோரியதால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று முந்தினம் போலீசில் புகாரளித்துள்ளார்.








