Sep 22, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். சந்தாதாரர்கள் இம்மாதம் 7 ஆம் தேதி முதல் வங்கிகளில் கடன் பெற முடியும்
தற்போதைய செய்திகள்

இபிஎப். சந்தாதாரர்கள் இம்மாதம் 7 ஆம் தேதி முதல் வங்கிகளில் கடன் பெற முடியும்

Share:

இபிஎப் சந்தாதாரரர்கள், வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வங்கிகளில் கடன் பெற முடியும் என்று அந்த வாரியம் அறிவித்துள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட இபிஎப் சந்தாதாரர்கள், தங்களின் 2 ஆவது கணக்கிலிருந்து குறைந்த பட்சம் 3 ஆயிரம் வெள்ளி சேமிப்புத்தொகை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வங்கிகளில் கடன் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய கடனை வழங்குவதற்கு பி.எஸ்.என் எனப்படும் பேங் சிம்பானான் நேஷ்னல் மற்றும் எம்.பி.எஸ்.எம் ஆகிய வங்கிகளைத் தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். நியமித்து இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதர வர்த்தக வங்கிகளில் விதிக்கப்பட்டு 8 முதல் 15 விழுக்காடு வட்டி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இக்கடனுக்கு மிக குறைந்த பட்ச வட்டியாக 4 முதல் 5 விழுக்காடு வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்துவற்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இபிஎப். 2 ஆவது கணக்கில் உள்ள சேமிப்புத் தொகைக்கு ஏற்ப தனிநபர் கடனாக கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக இபிஎப் குறிப்பிட்டுள்ளது.

Related News