கோலாலம்பூர், செப்டம்பர்.08-
பிளட் மூன் என்றழைக்கப்படும் அபூர்வ நிகழ்வான முழுச் சந்திர கிரகணத்தை நேற்று இரவு கோலாலம்பூர் தேசிய வானியல் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 500-கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
வானிலை மேக மூட்டமாகக் காணப்பட்டதால், முழுமையான காட்சி தெரியவில்லை என்றாலும் கூட, இரவு 11.30 மணியளவில் penumbral கிரகணத்தைக் காணும் வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.
முழு நிலவின் போது நிகழும் penumbral கிரகணத்தில், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் அரிய காட்சியை, தொலைநோக்கியின் மூலமாக மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








