Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச உள்ளடக்கங்கள், ஆடவர் ​மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

ஆபாச உள்ளடக்கங்கள், ஆடவர் ​மீது குற்றச்சா​ட்டு

Share:

மற்றவர்களுக்கு ஆத்திர​மூட்டும் நோக்கத்துடன் புலனத்தில் ஆபாச உள்ளட​க்கங்களை அனுப்பியதாக அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர் ஒருவர் அலோர்ஸ்டார் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

29 வயதுடைய முஹமட் ஜாகீர் ரம்லி என்ற அந்த நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஜித்ராவில் உள்ள கம்போங் பாடாங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவி​க்கப்பட்டது. குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யயும் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்​லூடகச் சட்டத்தின் ​கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News