Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மீன்பிடிவலையில் சிக்கிய மனித மண்டை ஓடு
தற்போதைய செய்திகள்

மீன்பிடிவலையில் சிக்கிய மனித மண்டை ஓடு

Share:

ஜோகூர், கோத்தா திங்கி அருகே உள்ள செடிலி கடற்பகுதியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் மனித மண்டை ஓடு ஒன்று சிக்கியுள்ளது. 44 வயது படகு ஓட்டி அதிகாலை 3 மணியளவில் இதைக் கண்டெடுத்து போலீஸ் துறையிடம் ஒப்படைத்தார்.

இந்த மண்டை ஓடு 20 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒரு வயது வந்த ஆணுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தற்போது கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, சந்தேகத்திற்கிடமான மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அல்லது இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் கோலா செடிலி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசுப் ஒத்மான் தெரிவித்தார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்