கோலாலம்பூர், நவம்பர்.13-
பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போனது குறித்து விசாரணை உதவி ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியவும், நீதியை நிலைநாட்டவும் அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
முந்தைய விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், உதவி ஆணையர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழு இனி அதற்குப் பொறுப்பேற்று அடுத்தக் கட்ட விசாரணைகளைத் துவங்கும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








