மூடா பகுதியில் இந்தப் பருவத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட விதை நெல்கள் தேவைக்கு ஏற்ப போதுமானதாக இருப்பதாக மாடா என்றழைக்கப்படும் மூடா வேளாண்மை முன்னேற்ற நிறுவனம் உறுதி அளிக்கிறது. 964 ஆயிரத்து 507 மெட்ரிக் டன் அங்கீகரிக்கப்பட்ட விதைநெல் தேவை இருப்பதாகவும் தற்போதைய இருப்பின் அடிப்படையில் போதுமானதாக இருப்பதாகவும் மாடாவின் தகவல் தொடர்புப் பிரிவு கூறியது.
அந்த விதை நெல்லை விவசாயிகள் அமைப்பின் வாயிலாகவும் நியமிக்கப்பட்ட சில்லறை வியாபாரிகள் வாடயிலாகவும் MR297, MR315 வகை விதை நெல் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.
130 ஆயிரத்து 846 விதை நெல் பொட்டலங்கள் தேவை எனக் கோரப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வரை 84 ஆயிரத்து 266 விதை நெல் பொட்டலங்கள் பெறப்பட்டும் 78 ஆயிரத்து 033 விதை நெல் பொட்டலங்கள் விநியோகிப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.
இது போக, அங்கீகரிக்கப்பட்ட விநியோகிப்பாளர்களிடமும் பதிவு செய்யப்பட்ட தனியார் முகவர்களிடமும் விதை நெல்லை மாடா விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.
அதே சமயம், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் போதுமான விதை நெல் கிடைக்கும்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மாடா கூறியது.








