Oct 16, 2026
Thisaigal NewsYouTube

FERRY சேவைகளை வழங்குகிற நிறுவனங்களுக்கு டீசல் மானியம் வழங்குகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
FERRY சேவைகளை வழங்குகிற நிறுவனங்களுக்கு டீசல் மானியம் வழங்குகிறது

டிச. 20-

மலேசிய அரசாங்கம் முக்கிய தீவுகளுக்குப் படகு - FERRY சேவைகளை வழங்குகிற நிறுவனங்களுக்கு டீசல் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. Labuan, Langkawi தீவு, Pangkor தீவு, Pulau Ketam ,Tioman தீவு, Pulau Redang . பினாங்கு போன்ற தீவுகளில் இந்த மானியம் கிடைக்கும். மானியத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 50 சென் ஆகவும், அதிகபட்ச மானியம் லிட்டருக்கு 50 சென் ஆகவும் வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதே இந்த மானியத்தின் நோக்கமாகும். எரிபொருள் செலவுகளைக் குறைப்பதன் மூலம் படகு சேவை வழங்குநர்களுக்கு இஃது உதவும். இந்த மானியம் படகு சேவைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அதே நேரத்தில் சேவை வழங்குநர்களின் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது ந்ன அவர் விவரித்தார்.

மானியம் பெற படகு – FERRY சேவை வழங்குநர்கள் மலேசிய கடல் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், அதே சமயம் வர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து டீசல் பெற வேண்டும். உள்நாட்டு வர்த்தக , வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் டீசல் கொள்முதல் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

டீசல் மானியம் படகு – FERRY சேவை வழங்குநர்களீன் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், படகு சேவையின் தரமும் பாதுகாப்பும் மேம்படுத்தப்படுவது அவர்களின் பொறுப்பு என்று அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தினார். இந்த மானியம் பயனர்களுக்கு சிறந்த - போட்டித்தன்மை வாய்ந்த படகு சேவைகளை உறுதி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →