கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-
லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் போக்கிற்கு அறவே இடமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார்.
அவர்கள் யாராக இருந்தாலும் எஸ்பிஆர்எம் தனது கடமையைச் செய்யும். சட்டம் பாயும். அதில் தாம் தலையிடப் போவதில்லை என்று பிரதமர் உறுதி கூறினார்.
எந்தவொரு விவகாரத்திலும் லஞ்ச ஊழல் இருந்து, அதற்கான ஆதாரங்கள் கிட்டுமானால் அதனை எஸ்பிஆர்எம் தோண்டி எடுக்கும். அவர்கள் தீபகற்ப மலேசியா அல்லது சபாவில் டான் ஶ்ரீஆக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி விசாரணை, விசாரணையே. சமரசத்திற்கு ஒரு போதும் இடம் கிடையாது. குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் சிறையே என்று பிரதமர் எச்சரித்தார்.
சபாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர், இன்று கோத்தா கினபாலுவில் நிகழ்த்திய உரையில் இதனை வலியுறுத்தினார்.








