Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் பதவி உறுதிமொழி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் பதவி உறுதிமொழி

கிள்ளான், டிச.2-


கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாராக டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேன் இன்று திங்கட்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

பணி ஓய்வுப்பெற்ற டத்தின் நோராயினி ரோஸ்லானுக்கு பதிலாக டத்தோ அப்துல் ஹமிட், கிள்ளானின் மாநகர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிள்ளானில் வெள்ளப் பேரிடருக்கான இடருக்கு உரிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 77 இடங்களின் வெள்ளப் தீர்வு காண்பதற்கு தமது முதன்மையாக கடமையாக இருக்கும் என்று 57 வயதான டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் வெள்ளப்பிரச்னைக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் அதேவேளையில் தற்போதைய வடிக்கால் கட்டமைப்பு முறையும் மீள்பார்வையிடப்படும் என்று கிள்ளான் மாநகர் மன்ற அலுவலகத்தில் பதவி உறுதிமொழி சடங்கிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அப்துல் ஹமிட் இதனை தெரிவித்தார்.

கிள்ளான் மாநகர் மற்றத் தலைவராக அப்துல் ஹமிட் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிப்பாங், நகராண்மைக்கழத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →