Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்
தற்போதைய செய்திகள்

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்

Share:

குவாந்தான், பிப்ரவரி.28-

கடந்த வியாழக்கிழமை, ரவூப், கம்போங் பாமா கூலாட் பகுதியில் நடந்த தீ விபத்தில், தமது தாய், தந்தை, சகோதரிகள் என ஐந்து பேரை இழந்த இருவரின் நலன் சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

19 வயதான Ruby Adalia Balqis Mohd Alawi மற்றும் 15 வயதான Ahmad Balia Murqam Mohd Alawi ஆகிய இருவரின் நலன் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக நேற்று தமது முகநூல் பக்கத்தில் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று காணொளி அழைப்பு வாயிலாக அவர்களுடன் உரையாடிய ஸாஹிட், தமது ஆறுதல்களைக் கூறிக் கொண்டார்.

இந்த துக்கமான நேரத்தில் அவர்கள் தங்களது கவலைகளை மறக்க, தம்முடன் ரமலான் பண்டிகையைக் கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Ruby Adalia தற்போது குவாந்தான், கம்பாங் பகுதியிலுள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும், Ahmad Balia Raub, SMK Dong பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.

சம்பவம் நடந்த போது, அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத காரணத்தால் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்