அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.19-
இன்று காலை 11.30 மணியளவில் ஆகாயப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்ட கெடாவில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலையத்தின் ஓடுபாதை பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ஓடுபாதை பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தவிருக்கும் பயணிகள், விமானங்களின் புறப்பாடு குறித்து அறிந்து கொள்ள அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அது ஆலோசனை கூறியுள்ளது.








