கோலாலம்பூர், நவம்பர்.10-
75 கிலோ கெத்தாமின் என்ற போதைப் பொருளுடன் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மலேசியர், எல்லைப் பகுதியில் கடத்தல்காரர்களின் போக்குவரத்தாளராக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, தாய்லாந்து போலீசாரால் அந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரின் பின்னணியை ஆராயும் போது, அந்த ஆடவர் இதற்கு முன்பு 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதையும் ஓமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.








