Dec 4, 2025
Thisaigal NewsYouTube
24க்கு 0 என ஹாங்காங்கை வீழ்த்திய மலேசிய ஹாக்கி அணி
தற்போதைய செய்திகள்

24க்கு 0 என ஹாங்காங்கை வீழ்த்திய மலேசிய ஹாக்கி அணி

Share:

இன்று ஈப்போவில் நடந்து வரும் சுல்தான் நஸ்ரின் ஷா அனைத்துலக சுழற்கிண்ண ஹாக்கி போட்டியில் களமிறங்கிய மலேசிய ஆண்கள் ஹாக்கி அணி ஹாங்காங்கை 24 க்கு 0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

இந்திரா முலியா உள்ளரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில், தேசிய அணியைச் சேர்ந்த முஹமாட் ஃபிர்டவுஸ் 5 கோல்களை அடித்து அணியின் வெற்றியை நோக்கி நகர்த்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நியூசிலாந்து அணியிடம் 2க்கு 1 எனும் கோல் எண்ணிக்கையில் மலேசிய அணி தோல்வி கண்டிருந்தாலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் இந்த வெற்றி பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.

முஹமாட் ஹனிப் செ ஹாலிம் இன் பயிற்சியில் களமிறங்கி இருக்கும் மலேசிய ஆண்கள் ஹாக்கி அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கின்றது.

அப்பட்டியலில் கலந்து கொண்ட ஆறு அணிகளில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்று வெற்றியாளர் யார் என முடிவு செய்யப்படும்.

Related News