Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார அமைச்சின் புதிய தலைமை இயக்குநர்
தற்போதைய செய்திகள்

சுகாதார அமைச்சின் புதிய தலைமை இயக்குநர்

Share:

கோலாலம்பூர், மே.29-

சுகாதார அமைச்சின் புதிய தலைமை இயக்குநராக டத்தோ டாக்டர் மஹாதார் அப்துல் வாஹாப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் இந்த நியமனம் நடப்புக்கு வருகிறது. மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாக்கார் அறிவித்தார். 56 வயதான டாக்டர் மஹாதார், கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News