Sep 27, 2026
Thisaigal NewsYouTube
இளைஞர்கள் வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியம்:  டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

இளைஞர்கள் வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியம்: டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப் வலியுறுத்தல்

Share:

சிபு, ஏப்ரல்.26-

இளைஞர்கள் கடந்த கால வரலாற்றைத் துல்லியமாகப் புரிந்து கொள்வதன் மூலமே பழைய தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார். சிபுவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வரலாறு என்பது வெறும் கடந்த காலப் பதிவு மட்டுமல்ல, அஃது எதிர்காலத்தை சிறப்பாகக் கட்டமைப்பதற்கான ஒரு வழிகாட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சரவாக்கின் பல்லின மக்களிடையே காணப்படும் ஒற்றுமையையும் முன்னோர்களின் தியாகங்களையும் ஆவணப்படுத்துவதன் மூலம், இன்றைய தலைமுறையினர் நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் போற்றிக் காக்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News