பினாங்கு, சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கைதி ஒருவர்,மிக லாவகமாக தப்பிச்சென்றுள்ளார். நேற்று பிற்பகல் 3.56 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கைதியை தேடும் நடவடிக்கையை போலீசார் முழு வீச்சில் முடுக்கியுள்ளதாக செபராங் பிறை செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் இங் ஆ தியாம் தெரிவித்தார். நோர்டின் அஹ்மாட் என்று அடையாளம் கூறப்பட்ட 54 வயதுடைய அந்த கைதி, காசநோய் தொடர்பான சிகிச்சைக்கு சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். டி சட்டை மற்றும் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த அந்த கைதியை பிடிப்பதற்கு போலீசார் ஓபி துதோப் எனும் தேடுதல் வேட்டையை தொடங்கியிருப்பதாக இங் ஆ தியாம் குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


