மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதுகாவலர் ஒருவர், வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு, சக்கரத்தில் அரைப்பட்டு, உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா– மலாக்கா தெங்ஙா நெடுஞ்சாலையில் புகிட் பியாத்து அருகில் நிகழ்ந்தது.
46 வயது ஆர். முரளி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த ஹொன்டா NF 100 ரக மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காண இயலவில்லை என்று மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்தோபர் பதோட் தெரிவித்தார்.
சவப்பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


