Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சியா?
தற்போதைய செய்திகள்

மாமன்னருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சியா?

Share:

ஜன.11
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுவது தீய நோக்குடன் கூறப்படும் அவதூறாகும். இது, அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இது போன்ற பொய்யான குற்றச்சாட்டும், அவதூறும் 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியாக மாமன்னருக்கு 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறப்படுவது நம்பும்படியிலை என்று முகைதீன் தெரிவித்தார்.

இது போன்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தில் பெரும் பதவிகளில் இருக்கின்றவர் உட்பட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் வேண்டுமென்றே கட்டவிழ்த்துள்ளனர். இதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று முகைதீன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்