Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பேரா, அக்டோபர் 22

தனது நண்பரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக விவசாயி ஒருவர், ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

26 வயது வான் முஹமத் என்ற அந்த நபர், நீதிபதி அஸிஸா அஹ்மத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 2 ஆம் தேதி காலை 10 மணியளவில் பேரா, பேரா தென்கா, முக்கிம் பந்தர், கம்புங் சுங்கை திமா-வில் உள்ள ஒரு வீட்டில் அந்த விவசாயி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →