Aug 7, 2026
Thisaigal NewsYouTube
5,000 Rohingya அகதிகளை திரும்ப அனுப்பும் திட்டம்: விளக்கம் கோரி Saifuddin Abdullah வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

5,000 Rohingya அகதிகளை திரும்ப அனுப்பும் திட்டம்: விளக்கம் கோரி Saifuddin Abdullah வலியுறுத்தல்

Share:

5,000 Rohingya அகதிகளை Myanmar-க்கு திருப்பி அனுப்பும் திட்டம் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் Saifuddin Abdullah தெரிவித்துள்ளார்.

அகதிகள் பாதுகாப்பாகவும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் மட்டுமே திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு தொடருகிறதா என்றும், அவர்களின் பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு Myanmar அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், Myanmar ராணுவ ஆட்சியுடன் மலேசியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மனிதாபிமான கொள்கை மற்றும் அனைத்துலக நம்பகத்தன்மையை பாதிக்கும் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5,000 Rohingya அகதிகளை மீள அனுப்பும் திட்டத்தின் முதற்கட்டமாக அடையாளம் காணுதல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு சோதனை பணிகள் தொடங்கியுள்ளதாக Saifuddin Ismail தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி