முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC International வழக்கிற்குத் தலைமையேற்ற நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் உறுதிபடுத்தியது தொடர்பில் நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில் நீதிபதி நஸ்லான் கஸாலிக்குத் தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்தன என்றும் அவர் நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் நாட்டின் நீதித்துறைக்கு தலைமையேற்றுள்ள தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் சட்டத்துறைக்குத் தலைமையேற்றுள்ள இட்ரூஸ் ஹருன் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்கஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


