ஈப்போ, டிசம்பர்.01-
நேற்று மஞ்சோங்கில் உள்ள ஒரு வீட்டில், 78 வயது முதியவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று மதியம் அவ்வீட்டிலுள்ள அறை ஒன்றில், அந்த முதியவர் தலை மற்றும் முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டார்.
மேலும், அதே வீட்டில், இரத்தக் கறையுடன் மண்வெட்டி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்முதியவர் அந்த மண்வெட்டியால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையில் நடந்த சவப் பரிசோதனையில், அம்முதியவரின் தலையில் கூறான ஆயுத்தத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.








