பினாங்கில் பெரு நிலத்திற்கும், தீவுக்கும் இடையிலான பெர்ரி சேவைக்கு கட்டண விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டணம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான கட்டணத்தில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படவிருப்பதாக பெர்ரி சேவையை நிர்வகித்து வரும் பினாங்கு துறைமுகம் எஸ்.டி.என். பி.ஹ்.டி நிறுவனம் அறிவிததுள்ளது.
இந்த சிறப்புக்கட்டண கழிவு நாளை தொடங்கி அடுத்த ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரையில் நடப்பில் இருக்கும் என்று பினாங்கு துறைமுகம் எஸ்.டி.என். பி.ஹ்.டி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டணத்தின் கீழ் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு விதிக்கப்பட்ட 2 வெள்ளி 50 காசு கட்டணம், ஒரு வெள்ளி 75 காசாக குறைக்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


