கோத்தா பாரு, ஆகஸ்ட்.28-
மனைவி அந்தஸ்தில் உள்ள பெண்மணி ஒருவர், தனியார் மருத்துவமனையின் இளம் மருத்துவருடன் தகாத உறவில் இருக்கும் காட்சியைக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியிருப்பதைத் தொடர்ந்து, அது தொடர்பாக போலீஸ் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாக கிளந்தான், கோத்தா பாரு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த வீடியோ பகிரப்பட்டு வருவது குறித்து தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசில் புகார் செய்து இருப்பதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.
தனது மனைவி, மருத்துவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்றை ஆடவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருப்பது, தற்போது வலைவாசிகளின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.
கடந்த 10 ஆண்டு காலமாக தங்களின் இல்லற வாழ்வில் மனைவி அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட நிலையில் நல்ல தோழியாக கருதி வந்த தனது மனைவியின் நம்பிக்கைத் துரோகச் செயல், தமது வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தியிருப்பதாக இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த ஆடவர் தாம் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.








