Oct 15, 2026
Thisaigal NewsYouTube

14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.12-

அமெரிக்கா, Los Angelesஇல் ஏற்பட்டப் பெரிய தீ விபத்தில் UCLA எனப்படும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் 14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய உயர்கல்வி அமைச்சு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கானத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பல்கலைக்கழகத்தின் அடுத்தக் கட்ட அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து Los Angeles வரலாற்றில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கையில் உள்ளனர். இந்த சோகமான சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசிய அரசு, Los Angelesஇல் உள்ள தூதரகம் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்