Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு, சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட டபல் சிக்ஸ் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கத்திற்கு, சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் சாலே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இழப்பீடு என்பது அந்த விமான விபத்துக்காக மட்டுமல்ல. மாறாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஹரீஸ் சாலே வலியுறுத்தினார்.

சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமான நிறுவனம் சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலியா புலன் விசாரணைக் குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News