Jun 18, 2026
Thisaigal NewsYouTube
பேரப்பிள்ளைகளின் எண்களால் வந்த அதிர்ஷ்டம்: டோட்டோ ஜாக்பாட்டில் 11.8 மில்லியன் ரிங்கிட் வென்ற ஓய்வுபெற்ற முதியவர்!
தற்போதைய செய்திகள்

பேரப்பிள்ளைகளின் எண்களால் வந்த அதிர்ஷ்டம்: டோட்டோ ஜாக்பாட்டில் 11.8 மில்லியன் ரிங்கிட் வென்ற ஓய்வுபெற்ற முதியவர்!

Share:

பேரப்பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் எண்களைக் கொண்டு டோட்டோ 4D ஜேக்பாட் 1 விளையாடிய பேரா மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது ஓய்வுபெற்ற விற்பனையாளர் ஒருவருக்கு 11.8 மில்லியன் ரிங்கிட் பரிசு விழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்போர்ட்ஸ் டோட்டோ விளையாடி வரும் இவர், தனது பேரப்பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் எண்களான "1660" மற்றும் "5093" ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து இந்த மாபெரும் தொகையை வென்றுள்ளார்.

இந்த அதிர்ஷ்டத் தொகையைக் கொண்டு தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பான முறையில் திட்டமிடப் போவதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதே குலுக்கலில் மீதமிருந்த 195,148 ரிங்கிட் தொகையைக் கோலாலம்பூரைச் சேர்ந்த மற்றொருவர் வென்றுள்ளார்.

இதற்கிடையில், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது ஓய்வுபெற்ற கட்டுமானத் தொழிலாளி ஒருவருக்கு ஸ்டார் டோட்டோ 6/50 ஜேக்பாட் 1 குலுக்கலில் 3.5 மில்லியன் ரிங்கிட் பரிசு கிடைத்துள்ளது. 3, 8, 11, 25, 38 மற்றும் 42 ஆகிய எண்களின் மூலம் இந்த அதிர்ஷ்டத்தை வென்ற அவர், இந்தத் தொகை தனது ஓய்வுகால நிதி நெருக்கடியைக் குறைக்கும் என்றும், நிலையான வருமானத்திற்காக இதனைத் தவனைக் கணக்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related News