Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தங்காப் ஆசம் பாக்கி' போராட்டத்தில் திடீர் பட்டாசு வெடிப்பு: போராட்டக்காரர்கள் மத்தியில் பதற்றம்
தற்போதைய செய்திகள்

தங்காப் ஆசம் பாக்கி' போராட்டத்தில் திடீர் பட்டாசு வெடிப்பு: போராட்டக்காரர்கள் மத்தியில் பதற்றம்

Share:

கோலாலம்பூர் சோகோ வணிக வளாகத்திற்கு வெளியே இன்று பிற்பகலில் நடைபெற்ற "தங்காப் ஆசம் பாக்கி" போராட்டத்தின் போது, திடீரென பட்டாசுகள் வெடித்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

போராட்டக்காரர்கள் டத்தாரான் மெர்தேக்காவை நோக்கிப் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தின் பின்புறத்தில் இருந்து அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த திடீர் வெடிப்புச் சத்தத்தால், அச்சமடைந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

உடனடியாகச் செயல்பட்ட போலீஸ் துறை அதிகாரிகள், பட்டாசுகள் வெடித்த இடத்தைச் சுற்றி வளைத்து, போராட்டக்காரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வழிநடத்தினர். இந்தச் சம்பவத்தில் ஒரு போராட்டக்காரர் காயமடைந்ததாகத் தெரிகிறது. எனினும், பட்டாசுச் சத்தம் நின்றவுடன் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் தங்கள் பேரணியைத் தொடர்ந்தனர்.

Related News