அமானா கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் இவ்வார இறுதியில் அமானா கட்சி தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக முன்மொழியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய சுகாதார அமைச்சராக டிசுல்கிஃப்லி அஹ்மாட் நியமிக்கப்பட்டுள்ள வேளையில், அமானா கட்சியை சேர்ந்த சிலர் அவரை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எத்தகைய முகாம்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் செல்லக்கூடிய டிசுல்கிஃப்லி - யின் திறன், அமானா கட்சியின் ஒருங்கிணைக்கு காரணியாக காணலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
தவறான கைகளுக்கு இப்பதவி சென்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெளிவான வழிகாட்டல் இல்லாமல், புதிய தலைமையின் கீழ் அமானா கட்சி செயல்பட வேண்டியதிருக்கும் என்று அவர்கள் கூறினர்.








