Jul 30, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்க, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை! டான் ஸ்ரீ ரசாருதீன் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்க, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை! டான் ஸ்ரீ ரசாருதீன் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 18-

தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது தெரிந்தவர்கள் காணாமல் போயிருந்தால், பொதுமக்கள் 24 மணி நேரம் காத்திருந்து போலீசில் புகாரளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய போலீஸ் படைத் தலைவர் காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்க, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை! டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் கூறுகிறார் தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற சம்பவம் நிகழும்போது, பொதுமக்கள் காத்திருக்க வேண்டுமென பொதுவாக கூறப்படுவது வெறும் கட்டுக்கதை என கூறிய அவர், அந்த உண்மையை அறியாமல் பலர், அத்தகவலைப் பகிர்ந்துவருவதாக கூறினார்.

தங்களுக்கு வேண்டிய நபர்கள் காணாமல் போனால், பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென எந்தவொரு சட்டமும் கூறவில்லை.

சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு கிடைக்கவில்லை. அவர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், உடனே போலீசில் விரைந்து புகாரளிக்க வேண்டும். அதன் வாயிலாக, அந்நபருக்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படுவதை, தவிர்க்க முடியும் என்றாரவர்.

இதனிடையே, காணாமல் போன நபர்கள் குறித்த தகவல்களை, போலீஸ் பல்வேறு தளங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருகின்றது.

அவ்வகையில், காணாமல் போன நபர்களை விரைந்து கண்டுபிடிக்க, அவர்கள் குறித்த தகவல்களை வழங்கி பொதுமக்கள் போலீசுக்கு உதவ வேண்டும் எனவும் ரசாருதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு