Oct 11, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் ஆசிரியர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் ஆசிரியர்

பாசீர் மாஸ், மே.15-

கிளந்தான், பாசீர் மாஸில் தமது 11 வயது சொந்த மகனைக் கத்தியால் குத்தியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து ஆசிரியர் ஒருவர் விசாரணை கோரியுள்ளார். நீதிபதி சுல்கிப்ளி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு 47 வயதான அஸ்ரோல்பஃண்டி அப்துல் சுகி எனும் அந்த ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அவர் தமது மகனைக் கொலை செய்யும் நோக்கிலேயே அச்சிறுவனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சித்ரவதைச் சட்டம் 307 ஆவது செக்‌ஷனின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அதே வேளை, அந்த ஆசிரியரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். அவ்வழக்கு ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஏற்கனவே மனநலப் பாதிப்பு இருப்பதாகவும் அவர் அதற்குச் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →