கோலாலம்பூர், ஆகஸ்ட். 14-
கோலாலம்பூர், செராஸ் ஸ்டேடியம் வெளியே நேற்று இரவு நடந்த சண்டை தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த அரங்கத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நடமாடும் உணவு வண்டியான ஃபூட் ட்ரக் Food Truck அருகில் நிகழ்ந்த இந்தக் கைகலப்பு தொடர்பில் நேற்று இரவு 11.15 மணியளவில் அரங்கத்தின் பாதுகாவலரிடமிருந்து போலீசார் தகவல் பெற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரிட்ஸுவான் காலிட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தைப் போலீஸ் குழு சென்றடைந்த போது, அந்த இடத்தில் அனைவரும் கலைந்து சென்று விட்டனர். அவ்விடம் அமைதியாகக் காணப்பட்டது என்று ரிட்ஸுவான் காலிட் குறிப்பிட்டார். எனினும் இது தொடர்பாக வைரலாகியுள்ள காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கைகலப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








