தமது மகனை பிரம்பினால் அடித்து கடும் காயம் விளைவித்த குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்ததுடன் 1,400 வெள்ளி அபராதம் விதித்தது.
வேலையற்ற நபரான 36 வயது கோ சியாவ் ஹோ என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனாலியா கருடின் இத்தண்டனையை விதித்தார்.
மாணவன் ஒருவன் தமது தந்தையால் கடுமையாக தாக்கப்பட்டதாக பள்ளி ஆசிரியர் ஒருவர், மருத்துவமனையில் தகவல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் அந்த மாணவனின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


