Aug 13, 2026
Thisaigal NewsYouTube
'ஈப்போ' பெயர் சின்னத்தில் சீன எழுத்துகள் சேர்க்கப்பட்டதாக பரவும் படம் போலியானது – மாநகராட்சி விளக்கம்
தற்போதைய செய்திகள்

'ஈப்போ' பெயர் சின்னத்தில் சீன எழுத்துகள் சேர்க்கப்பட்டதாக பரவும் படம் போலியானது – மாநகராட்சி விளக்கம்

Share:

பேராக் மாநிலம் ஈப்போ நகரின் பிரபல பெயர் அடையாள பெயர் பலகையின் அருகில் சீன எழுத்துகள் இடம் பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் படம், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படம் என ஈப்போ மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

அப்படம் பொதுமக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியது என்றும், நகரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

“ஈப்போ தற்போது பெய்ஜிங்கின் ஒரு மாவட்டத்தைப் போல் மாறி வருகிறது” என்ற வாசகத்துடன் அந்த போலி படமானது முகநூல் குழுவொன்றில் பகிரப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், அதனை உருவாக்கி பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சுமார் 17 ஆண்டுகளாக குனுங் லாங் அருகே அமைந்துள்ள அந்த "ஈப்போ" பெயர் அடையாள சின்னமானது, பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 15-ஆம் தேதி அகற்றப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த பின்னர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மீண்டும் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி