Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!
தற்போதைய செய்திகள்

3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.10-

3 இளம் மோட்டார் ஓட்டிகளின் மரணத்திற்குக் காரணமான, 17 வயது கார் ஓட்டுனர் எதிர்கொண்டுள்ள, 3 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவை, வரும் நவம்பர் 19-ஆம் தேதி விசாரிக்க சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இன்று செப்டம்பர் 10-ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜொஹான் ரட்ஸி, அவரது மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1 அருகே உள்ள தாமான் மாதாஹாரி சந்திப்பில், கவனக் குறைவாக வாகனம் ஓட்டி இவ்விபத்தை ஏற்படுத்தினார் என அக்கார் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News