கோலாலம்பூர், செப்டம்பர் 17-
தொடக்கப் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வான upsr , மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது .
தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்வி அடைவு நிலையை உறுதி செய்யவும் , உயர்தரமான கல்வி இலக்கை நோக்கி மாணவர்கள் பயணிப்பதற்கும் அரசாங்க அளவிலான கல்வித்தேர்வுகள் , மிக முக்கியம் என்று மாரா தலைவர் டத்தோ அசிராஃப் வாஜ்டி டுசுகி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் அரசாங்க கல்வித் தேர்வுகள் , இல்லாதது கோல் கம்பம் இல்லாத கால்பந்தட்டத்திற்கு சமமாகும் .
இலக்கு இல்லாத எந்தவொரு விளையாட்டிலும்,ஆட்டக்காரர்கள் இருக்கலாம் . வெற்றி-தொல்வி என சுய அடைவு நிலைய மதிப்பீடு செய்யக்கூடிய பந்தயக்களம் இருக்காது .
மலேசியாவின் தரமான கல்வி நிலையை மீட்டெடுக்ப்பதற்கும், மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் உற்சாகம் நிறைந்த பந்தயக்களத்தை உருவாக்குவதற்கும் upsr எனும் அரசாங்க கல்வி தெர்வு முறை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ அசிராஃப் வலியுறுத்தியுள்ளார்.








