Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் தொகுதியில் தீபாவளி பற்றுச்சீட்டு
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் தொகுதியில் தீபாவளி பற்றுச்சீட்டு

Share:

வரும் தீபாவளியை முன்னிட்டு சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கு 200 வெள்ளி மதிப்பிலான 450 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்பம் தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு திறக்கப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் இதனைப் பெறுவதற்கு தொகுதி சேவை மையத்தில் குவிந்தனர்.

நேற்று அக்டோபர் 19 ஆம் தேதி மட்டும் 280 விண்ணப்பங்களை தொகுதி மக்களிடமிருந்து தாங்கள் பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.

இம்முறை இத்தொகுதிக்கு 450 பற்றுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை ஆலம் மெகா, ஹைக்கோம், புக்கிட் கெமுனிங், புக்கிட் ரீமாவ், கோத்தா கெமுனிங்,புத்ரா ஹைட்ஸ், தாமான் ஸ்ரீமூடா ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News