ஜோகூர் பாரு, டிசம்பர்.16-
நாட்டில் மின் சிகரெட் எனப்படும் வேப் விற்பனையை 2026 ஆம் ஆண்டுக்குள் முற்றாகத் தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
இதற்கான பொருத்தமான நேரத்திற்காக சுகாதார அமைச்சு தற்போது காத்திருக்கிறது. வேப் விற்பனையைத் தடை செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழவில்லை.
அதனைத் தடை செய்வதற்குப் பொருத்தமான நேரத்திற்காக அரசாஙகம் காத்திருக்கிறது என்று இன்றுடன் சுகாதார அமைச்சர் பதவியை நிறைவு செய்யவிருக்கும் கோல சிலாங்கூர் எம்.பி.யான டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.








