May 24, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வயது குழந்தைக்கு போதைப்பொருள் தந்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மூன்று வயது குழந்தைக்கு போதைப்பொருள் தந்ததாக குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

தங்களது மூன்று வயது பெண் குழந்தை போதைப்பொருள் உட்கொண்டதற்கான அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்குழந்தையை பாதுகாக்க தவறியதாக கூறி, கணவன், மனைவி, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு வர்த்தகரான 26 வயது நபரும், அவரின் 21 வயது மனைவியும் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி, கோலாலம்பூர், கெபோங், ஜாலான் குவாங் பெர்டாம்- என்ற இடத்தில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் கணவனும், மனைவியும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News