Nov 3, 2025
Thisaigal NewsYouTube
சூடானில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சூடானில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழ்ந்து வரும் வன்முறை, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சூடானில் El Fasher மற்றும் Darfur ஆகிய பகுதிகளில் நிகழ்ந்து வரும் வன்முறை நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

சூடானில் நிகழ்ந்து வரும் நெருக்கடிக்கு தமது கவலையைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பசி பட்டினியால் வாடுவதை உலகம் பார்த்துக் கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடி தொடருமானால், உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு மனிதப் படுகொலை நிகழலாம் என்று பிரதமர் அச்சம் தெரிவித்தார்.

சுடானில் தற்போது சக்தி வாய்ந்த இரு இராணு தலைமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

Related News