Oct 18, 2026
Thisaigal NewsYouTube

டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 12-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், மூட்டு வலி காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்று வருவதால் அவருக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த 1MDB மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நஜீப்பிற்கு வழங்கப்பட்டுள்ள மேலும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவப்பிரிவு இயக்குநர் டாக்டர் சிதி ஹவா தாஹிர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி Collin Lawrence Sequerah-வின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அந்த மருத்துவ நிபுணர், தற்போது நஜீப் துக்கமின்மையினால் அவதியுற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நஜீப்பிற்கு எதிரான வழக்கு விசாரணையை நீதிபதி கொலின் லாரன்ஸ், வரும் செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Thisaigal News