Sep 17, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!

Share:

கிளந்தான் மாநிலத்திலுள்ள உணவகம் ஒன்றில் தனது 5 வயது மகளை உதைத்து துன்புறுத்தியதாக 40 வயது ராணுவ வீரர் மீது கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி இரவு 10.55 மணியளவில், கோத்தா பாருவில் ஜாலான் கோலா கிராய் பகுதியில் உள்ள உணவகத்தில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிபதி ஸுல்கிஃப்லி அப்லா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தனது குற்றத்தை மறுத்த அந்நபர், விசாரணை கோரினார்.

இக்குற்றச்சாட்டின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறார் சட்டம் 2001-ன் 31(1)(a) பிரிவின் கீழ், அதிகபட்சம் 50 ஆயிரம் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மலேசியாவில் எதிரொலித்தது: 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு

அழிவின் விளிம்பில் போர்னியன் யானைகள்: பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்

நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து

தொழில் நிறுவனங்களுக்கு 15 பில்லியன் நிதி: குஸ்கோப் நடவடிக்கைக்கு எஃப்எம்பிஏ வரவேற்பு

சுங்கை பட்டாணி நகைக் கடையில் துணிகரம் - 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் நகைகள் கொள்ளை

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது