ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.08-
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இந்திய மாது ஒருவர், இதுவரை வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
35 வயது சுபாஷினி ஷடி குமார் என்ற அந்த மாது காணாதது குறித்து அவரின் அண்ணன், போலீசில் புகார் செய்துள்ளார் என்று செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜே ஜனவரி சியூவோ தெரிவித்தார்.
பொருட்களை வாங்குவதற்குக் கடைக்குச் செல்வதாகக் கூறி, வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பாதது குறித்து, அவரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுபாஷினியைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்து உதவுமாறு சுப்ரிண்டெண்டன் ஜே பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








