Tanjung Rambutan-Chemor சாலையில், Changkat Kinding என்ற இடத்தின் அருகே SUV ரக வாகனம் ஒன்று, Honda RS150 ரக மோட்டார் சைக்கிளை மோதியதில் உணவு விநியோகிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 10.44 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், Taman Cahaya Tasek வைச் சேர்ந்த, 32 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர், ACP Yahaya Hassan தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் காயமும் இன்றி உயிர்த்தப்பிய நிலையில், உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக Ipoh, Raja Permaisuri Bainun மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Yahaya Hassan குறிப்பிட்டார்








